ஞாயிறு, 22 செப்டம்பர், 2019


சுவரு

பெருங்களத்தூரில்  இறங்கி வந்த முதல் பஸ்ஸில் ஏறி கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டேன்

காலை நேரம் வேலைக்கு பள்ளிக்கு செல்பவர்களால் பஸ் நிறைந்து விட்டது

மிகுந்த சிரமப்பட்டு உள்ளே வந்தவரை
யோவ் காலை மெரிக்காமா தள்ளி போயா என்று கண்டக்டர் நெட்டி தள்ளியதில் ஒரு கையில் பையோடு தடுமாறி நிலைகுலைந்து சமாளித்து பெண்கள் போல் சீட்டு கம்பியை பிடித்து கொண்டார்.

பல்லை கடித்து பொருப்பதும் மீறி வலி கண்ணில்  தெரிகிறது, சங்கடத்தை மறைத்து கொண்டு வெளியில் பார்க்கிறார் வயது 40க்கு
மேல் இருக்கும் சராசரி உயரம் நோயில் முகம் வாடி வெளிரி இருந்தார்.

அருகில் இருந்த பெரியவர் 60 வயது இருக்கும் கைகள் எல்லாம் காய்ப்பு மணி கட்டு பெரியதாக உள்ளங்கை அகலாமாக ஏதோ கை கொண்டு கடுமையாக வேலை செய்பவாராக இருக்க வேண்டும்

சார் தடுமாறாம மேலே கம்பிய பிடியுங்கள் என்றார் பெரியவர்

அவர் வெறித்துப் பார்த்துக் கொண்டு இரண்டு கையும் மாருக்கு மேலே தூக்க முடியல வலி
உயிர் போவுது ஆஸ்பத்திரிக்கு தாங்க  போறேன்

சார் நீங்க உட்காருங்க என்று உடன் எழுந்து
கொண்டார்

அமர்ந்து இருந்த நான் வெட்க்கி போனேன்.

இந்த வயதிலும் நைட் ஷிப்ட் பார்த்துட்டு போறேன் டயர் பஞ்சர் ஒட்டதறது தான் வேலை

உடம்பு வலிக்க வேலை செய்தா நோவு வராது
சார், கிராமத்துல சொல்லுவாங்க சுவரு இருந்தா தான் சித்திரம்முனு நல்ல டாக்டரா
பார்த்து காட்டுங்க என்று சொல்லி சென்றார்

நான் சினேகமாக பார்த்ததும்

நிறைய டாக்டர்ட்ட காண்பித்து விட்டேன் ஒன்றும் சரியாக மாட்டேங்குது இந்த டாக்டர்
காட்டினால் நல்லாகுமா தெரியல

எவ்வளவு நாளா இருக்கு சார்

மூன்று மாசமா உயிர் வாதனையாக இருக்கு
சார்

கையை ஆறுதலா பிடித்து சார் மூட்டு வலி
எல்லாம் ஆயுர்வேத மருந்துக்கு தான் கொஞ்சம் கட்டு படும் அதுவும் பூரா குணமாக்கறது கஷ்டம் நீங்கள் டிரை பண்ணி பாருங்க இந்த பஸ் அண்ணா நகர் போகுமா

அய்யோயோ இது போவாது சார் வர ஸ்டாப்பில் இறங்கி கேட்டு ஏறுங்கள் சார்

காலையிலே வந்துட்டானுவ சிக்கிரம் இறங்குயா என்றார் கண்டக்டர்

இறங்கி சமாளித்து நின்றேன் ஒரு கால் வலித்தது......

வேலு
12/01/2016








வியாழன், 14 ஜனவரி, 2016

நன்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
தி.வேல்முருகன் 

Happy kite festivals
காவோ பியோ மஐாக்கரோ

இது தான் குஐராத்திகளின் வாழ்க்கை முறை

காவோ
தம்பாக்கு அல்லது மாவா
என்கிறார்கள் அதை அசை போட்டு கொண்டு இருப்பார்கள் எப்போது துப்ப வேண்டும் என்பதில் ஒரு கணக்கு இல்லை

மெல்லுபவர்களின் புலன் இன்பம் உச்ச நிலையை அடைந்து சிறிது கிழ் இறங்கும்
போது போளிச் என்று துப்பி விட்டு அன்னிச்சையாக பேச்சை எதிர் இருப்பவர்களிடம் தொடருவார்கள் அவர்
குஐராத்தியாக இருந்தால் இரண்டு புறமும்
அபிஷேகம் தொடரும்

ரோடு எல்லாம் சிவப்பாக தெரிவதலெல்லாம்
இரத்தம் அல்ல இவர்களின் எச்சில் தான்

பியோ

பத்து தப்பட்டிக்கு ஒரு டீக்கடை அதில்
எப்போதும் டீ கிடைக்கும் சிறுவர்கள் ஒரு
கையில் தண்ணீர் மறுகையில் டீ வைத்து
கொண்டு நிற்பார்கள்

காரில் வருபவர் ஆரன் அடித்தால் ஓடி கொடுக்க வேண்டும் பாதி வண்டி மேலேயே வாயை கொப்பளித்து விட்டு டீயை பருகுவர்

பால் எடுத்து வருபவர்கள் ஸ்பெளன்டர் அல்லது புல்லட்டில் வருவார்கள் வயது 16 ல்
இருந்து 70 அனாயசமாக திரும்புவார்கள்

நடக்கும் நீங்கள் தப்பிப்பதற்க்கு எப்பவுமே
ஐாக்கிஐான் மனநிலையில் அலர்ட்டாக இருக்க வேண்டும் இல்லை என்றால்
பால் அல்லது அபிஷேகம் தான்

மஐாக்கரோ
சன்டே என்றால் குடும்பத்தோடு அவுட்டிங்
கடைகள் பெரும்பாலான பகுதிகளில் மூடியே
இருக்கும்,
சமைக்க குடிக்க தண்ணீர் வேண்டும் கொடுங்கள்

நை நை
நாளைக்கு தருகிறேன் என்பர்

நடந்த நடைக்கு பூமியே சுற்றி வந்து இருக்கலாம் அப்படி காலையில் நடந்த போது
மூன்று குச்சி நட்டு அதில் ஒரு கெட்டில்
நடுவில் சிறிதாக தீ முட்டம் சிறுவர்கள் அருகே அமர்ந்து தீ காய்ந்து கொண்டு சுடும் போது உடல் வளைத்து திரும்பியது கவிதையாக இருந்தது

சினிமா போல் அங்கு யாரும் ஆடவில்லை

ஆயா போலிருக்கு ஆஐாவ்,ஆஐாவ் என்றதும்
கலைந்து ஒடினர் டீ ஊத்தி கொடுக்கிறார்

புன்னகையுடன் நடையை தொடர்ந்து திரும்பு
போது பார்தால் சிறுவர்கள் கையில் பலூன்

விளையாட வேண்டிய வயதில் வயிற்றுக்காக
அந்த பலூனை விற்று கொண்டு இருக்கிறார்கள்

நகரமே அவர்களிடம் பலூனை வாங்கி கொண்டாடுகிறது. இன்று இங்கு பட்டம் விடும்
விழா

வேலு
13/01/2016


செவ்வாய், 13 அக்டோபர், 2015

பூ உதிர்ந்தது 

பெயின்டர் தாத்தாவிடம் அந்த புல்லாங்குழலை இசைக்க

கத்து கொள்ள வேண்டும் என்ற கார்த்தியின் 

முயற்சி ஒன்றும் அவன் போடும் கணக்கு போலவே கை கூடவில்லை. 


ம் கை கூடுவது என்றால் சும்மாவா 

அவனது வகுப்பில் உள்ள மற்ற பசங்க எல்லாம் சைக்கிள் வைத்து இருக்கின்றனர்.

இவன் கேட்டால் மட்டும் காற்று இல்லை என்பார்கள், கிட்ட வந்து மிக வேகமாக ஓட்டிச் செல்வார்கள். 


அவனது காட்டில் என்றாவது சிறு மழை போல்

கல் ஏற்றி செல்லும் வண்டிகளோ அல்லது சித்தாப்பக்களின் சைக்கிளில் பின் செல்லும் 

வாய்ப்போ கிடைத்துவிடும் அன்று ஆனந்தம் தான். 


ஆனால் வீடு திரும்பும் போது அதற்க்கெல்லாம்

சேர்த்து கிடைக்கும் கிரீஸ் கரையோ அல்லது கிழிந்தோ போய் இருக்கும் துணி.கேட்டால் சைக்கிள் வாங்கி கொடுங்கள் என்பான்.பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும் விட்டு விடுவார்கள். 


இதற்கு எல்லாம் முடிவு கட்ட அவனுக்கு புது

அட்லஸ் சைக்கிள் வாங்கி தந்தார்கள். கைக்கெட்டியது வாய்க்கெட்டாத கதையாக

கார்த்திக்கு கால் எட்டவில்லை சீட்டிலிருந்து.


ஒந்தி ஏறுவதும் அல்லது உயரமாக படியில் இருந்து சிட்டிலமர்ந்து ஒட்டுவதற்க்கு பழகிக் கொண்டான்.அதற்கு பிறகு தான் சோதனையே நெல் அறைக்க வேண்டும், 

நல்ல தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று வீடு வந்ததும் சரியாக கவிழ்வதுமாக இருந்தது   வாழ்க்கை போல சைக்கிளும் பிறகு பழகிவிட்டது. 


எல்லாம் அது போல் பழக முடியாது அல்லவா 


இவன் தேடும் போது தாத்தா வேலைக்கு போய் விடுவார் அல்லது அவர் இருக்கும் போது இவனுக்கு ஸ்கூல் இருக்கும். இப்படியே

இந்த ஆடுபுலி ஆட்டம் தொடர்ந்தது.அவனும் மேல் நிலைப்பள்ளி சென்று வர ஆரம்பித்து விட்டான் பிறகு முடியவில்லை. 


எப்போதோவது அவர் புல்லாங்குழல் இசையை கேட்டால் நின்று கேட்டு விட்டு செல்வதே அவனுக்கு வாடிக்கை. அது தொடர்ந்து ஒரே மாதிரியான  ராகத்தில் இருக்கும் கற்பனைக்கு எட்டாத ஒரு மயக்கும் இசை. 

சிறிது சோகரசம் சேர்ந்தொலிக்கும்.


அவரை பின் தொடர்ந்து வீட்டிற்கு சென்றால்

ஆடு குட்டிகள் மற்றும் குருவிகள் எல்லாம் கத்தும் வாசலில் வாடமல்லி கலரில் காகித

பூ உதிர்ந்து கிடக்கும்


வரன்டா,வரன்டா

என்று ஆடுகளுக்கு கருவை காயும் குட்டிகளக்கு கிளுவை தழையும் வைப்பார்,

பக்கத்தில் இருக்கும் கொய்யா மரத்தில் 

இரண்டு கிண்ணம் இருக்கும் ஒன்றில் நீரும்

மற்றொன்றில் தானியமிடுவார்.


குருவிகள் எல்லாம் கிரிச் சத்தமிட்டு வரும் வீடு கூரைதான் சுற்றி பவழமல்லி,சந்தனமுல்லை,சாமந்தி என்று தேர்ந்த ஓவியனின் சித்திரம் போல் இருக்கும். வேலி ஒரத்தில் வைத்திருக்கும் டேபிள் ரோசும்,பட்ரோஐாவும் பூத்து சிரிக்கும் பார்த்த கண்கள் பார்த்திருக்க


தாத்தா சாமந்தி செடி எப்படி இவ்வளவு இருக்கு.


மாப்பிள்ளை அங்கே பாரு 

பார்த்த இடத்தில் ஒரு சாமந்தி மாலை மண்ணில் பாதி தெரிய மூடி இருந்தது. அதில் சிறிதும் பெரிதுமாக சாமந்தி கன்றுகள். 


ஒன்றை புடிங்கி 


ஆள்காட்டி நடுவிரல் இடையில் வைத்து பாதி மண்ணில் தெரிய ஊன்றி சுற்றி அழுத்தி விட்டு தண்ணீர் தெளித்து பார்த்துக்க என்றார்.


தாத்தா நல்ல உயரம் வேலை செய்த உடம்பு 

கருப்புதான் குணத்தில் சுத்தம் தங்கம்

காலை சூரியோதயத்துக்கு முன்பு குளித்து விபுதியிட்டு வந்து அங்காளம்மன் கோயில் முன்பு 

இரண்டு கை கூப்பி வணங்கும் போது சூரியனும் எட்டி பார்க்கும்.ஒரு சேர வணங்குவார்.


அவன் தூக்க கலக்கதில் சிறுநீர் கழிக்க வெளிவந்து பார்கும் போது தாத்தா திரும்புவார். கையில் இதுபோல் மாலையோ

தழையோ இருக்கும். 

தாத்தா குருவிக்குலாம் தீனி வக்கிரிய,புடிச்சு சாப்பிடுவ தான

ஏய் இல்லப்பா அதுவளுக்கு தீனி தண்ணீலாம்

கிடைக்காதுல அதான் 

தாத்தா நான் ஒரு குயில புடிச்சு ஆக்கி சாப்ட்டன்.

படிக்கறவன் நீ எப்படிரா புடிச்ச

தாத்தா ஸ்கூல் லீவுல ஊருக்கு போனன்ல

மாமா பூலா குச்சில வளையம் சென்சு அது நடுவுல சின்ன கழுத்து நுழையரளவு வளையம் வச்சு சுற்றி குயில் உட்காரதற்க்கு சிலந்தி வலை மாதிரி பின்னிட்டு நடுவுல மாட்டு முடியால சுருக்குப்போட்டு அதுக்கு

கண்ணுக்கு தெரியாத மறைச்சு மரத்தில 

கட்டுச்சு

கட்டுக்கோடி பழம் சிகப்பும் மன்சளுமா இருக்கும் அத கட்டுச்சு நடுவுல தாத்தா 

அதுல மாட்டுல

நான் பார்த்து வச்சிருந்தன்ல

அதே மாதிரி சென்சு வக்கீல் வுட்டு கருவ மரத்துல கட்டுனம் பாரு சாயந்திரம் கருப்பு குயில் மாட்டிடுச்சு,பார்த்துட்டு 

அப்பா ஏசுச்சா பிறகு அத்த வீ்ட்டுல சென்சு

சாப்பிட்டோம்

நான் புடிக்கரதுல்ல.


பாவம் அது வோ எப்பவும் புடிக்க கூடாது. 

விளையாடு ஓடு ஓடு.


காலம் இருவருக்கும் முன்னே வேகமாக ஓடியதில் அவன் கல்லூரி சென்றான்.

தாத்தா வேலைக்கு செல்வார்

பெயின்டர் என்றால் கடவுள் சிலைகளுக்கு வண்ணம் தீட்டுவதில் மிக பேர் போனவர்.வேலை இல்லை என்றால் மட்டுமே அவர் வீடுகளுக்கு வர்ணம் அடிக்க செல்வார்

பெண்களை அம்மா என்றும் பிள்ளைகளை

ஐயா என்று கூப்பிடுவதிலேயே பிரியம் தெரிய